யாழ். மாவட்டத்தில் மரக்கறி வகைகளின் விலைகள் தொடர்ந்தும் ஏறுமுகமாகக் காணப்படுவதால் பொதுமக்கள் பாதிப்பினை எதிர்கொண்டுள்ளனர்.
யாழ். மாவட்டத்தின் இன்றைய(23) மரக்கறி விலை நிலவரப்படி,
ஒரு கிலோ வெங்காயம்-400 ரூபா, ஒரு கிலோ பச்சை மிளகாய்-400, ஒரு கிலோ கறி மிளகாய்- 260 ரூபா, ஒரு கிலோ பாகல்- 250 ரூபா, ஒரு கிலோ பீற்ரூட்- 240 ரூபா, ஒரு கிலோ போஞ்சி -200 ரூபா, ஒரு கிலோ பெரிய வெங்காயம்- 160 ரூபா, ஒரு கிலோ கரட்-150 ரூபா, ஒரு கிலோ தக்காளி- 140 ரூபா, ஒரு கிலோ பயிற்றை- 100 ரூபா முதல் 120 ரூபா, ஒரு கிலோ வெண்டி 120 ரூபா, ஒரு கிலோ உருளைக்கிழங்கு- 100 ரூபா, ஒரு கிலோ கோவா-100 ரூபா ஆகிய விலைகளில் விற்கப்படுகின்றன.
இதேவேளை, முக்கிய பொருளாதார சந்தையான தம்புள்ளைச் சந்தையிலிருந்து யாழ். மாவட்டத்திற்கு மரக்கறி வகைகள் தினம் தோறும் எடுத்து வரப்படுகின்ற போதும் மரக்கறி வகைகளுக்குத் தொடர்ந்தும் கிராக்கி அதிகரித்த நிலையிலேயே காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்தித் தொகுப்பு மற்றும் காணொளி:- எஸ். ரவி.
0 comments:
Post a Comment