சட்டவிரோதமாக இந்தியாவுக்குக் கடத்திச் செல்ல முற்பட்ட 12 கிலோக் கிராம் நிறையுடைய 120 தங்க பிஸ்கட்டுக்களுடன் தலைமன்னாரில் இலங்கையர் இருவரைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
நேற்று இரவு(28) கடற்படையினருக்குக் கிடைத்த தகவலுக்கமைய தலைமன்னார் ஊருமலை கடற்பகுதியில் வைத்துக் கடல் வழியாக இந்தியாவுக்குக் கடத்திச் செல்லப்படவிருந்த தங்கக் கட்டிகளுடன் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட தங்கக் கட்டிகளின் பெறுமதி ஏழு கோடி ரூபாவுக்கு அதிகமானதெனத் தெரிவிக்கப்படுகிறது.
0 comments:
Post a Comment