//]]>

Tuesday, December 27, 2016

தாளையடி, இயக்கச்சி பகுதிகளின் கடலேரிகளைப் பாதுகாக்கும் நோக்கில் 5000 கண்டல் தாவரங்கள்(Photos)


ஆழிப்பேரலையின் 12 ஆவது  ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு யாழ். மாவட்டச் செயலகம்,மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் ஏற்பாட்டில் முதற்தடவையாக யாழ்.மருதங்கேணிப்  பிரதேச செயலகத்திற்குட்பட்ட தாளையடி, மற்றும் இயக்கச்சி ஆகிய பகுதிகளின் கடலேரிகளைப்  பாதுகாக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாக கண்டல் தாவரங்களை நடும் செயற்றிட்டம் நேற்றுத் திங்கட்கிழமை(26) கொடுக்குளாய் கடலேரியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

குறித்த செயற்திட்ட நிகழ்வில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன், யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் சங்கரப்பிள்ளை ரவி ஆகியோர் கலந்து கொண்டு கண்டல் தாவரங்களைச் சம்பிரதாயபூர்வமாக நாட்டிச் செயற்திட்டத்தை ஆரம்பித்து வைத்தனர். 

குறித்த நிகழ்வில் மருதங்கேணிப் பிரதேச செயலர் க.கனகேஸ்வரன், வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், கிராம சேவையாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்

குறித்த வேலைத் திட்டத்தின் முதற்கட்டமாக 5000 கண்டல் தாவரங்கள் நடுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment