பிரபல கல்லூரிகளில் ஒன்றான யாழ்ப்பாணம் இந்து கல்லூரியில் புதிதாக இணைந்து கொண்ட தரம்-06 மாணவர்களுக்கான கால்கோள் விழா இன்று திங்கட்கிழமை(29) காலை-08 மணி முதல் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
கல்லூரியின் அதிபர் சதா நிமலேந்திரன் தலைமையில் நடைபெற்ற குறித்த விழாவில் வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் குரே முதன்மை விருந்தினராகவும், யாழ். சின்மயா மிஷன் தலைவர் பிரம்மச்சாரி- ஜாக்கிரத சைதன்ய சுவாமிகள் மற்றும் தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தின் தலைவரும், பிரபல ஆன்மீகச் சொற்பொழிவாளருமான கலாநிதி -ஆறுதிருமுருகன் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொண்டனர்.
குறித்த விழாவில் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள் எனப் பெருமளவானோர் கலந்து கொண்டனர்.
(தமிழின் தோழன்)
0 comments:
Post a Comment