யாழ். குடாநாட்டின் பல்வேறிடங்களும் இன்று திங்கட்கிழமை(11) பிற்பகல் திடீரெனக் கடும் மழை கொட்டித் தீர்த்துள்ளது. இந்த மழை வீழ்ச்சி பல மணித்தியாலங்களாக நீடித்துள்ளது.
கடந்த பல நாட்களாக யாழ். குடாநாட்டில் வெயிலுடனான காலநிலை நிலவிய சூழலிலேயே திடீர் மழை பெய்துள்ளது. கடும் மழை காரணமாக வீதிகளின் பல்வேறிடங்களிலும், தாழ்வான பல பகுதிகளிலும் அதிகளவு வெள்ளநீர் தேங்கிக் காணப்பட்டது.
திடீர் மழை காரணமாகப் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment