//]]>

Tuesday, February 6, 2018

எங்கள் கைகளிலுள்ள ஒரேயொரு ஆயுதம் இதுதான்!;யாழில் சம்பந்தன் முழக்கம்(Video)

தேர்தல் காலத்தில் எங்களுக்குள் சில பல அதிருப்திகள்  ஏற்படலாம்.அது சகஜம். எந்தவிதமான அதிருப்திகள் உங்களுக்கு ஏற்பட்டிருந்தாலும் நான் உங்களிடம் அன்பாகக் கேட்டுக் கொள்வது என்னவெனில் தற்போதைய சூழலில் எங்கள் கைகளிலுள்ள ஒரேயொரு ஆயுதம் ஒற்றுமை எனத் தெரிவித்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான  இரா. சம்பந்தன் எமது ஒற்றுமை பாதுகாக்கப்பட வேண்டும்.இந்தத் தேர்தலில் நாங்கள் அளிக்கின்ற தீர்வு ஒருமித்த தீர்வாக அமைய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கான மாபெரும் தேர்தல் பரப்புரைக் கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை(06)  பிற்பகல் யாழ். நல்லூர் சங்கிலியன் பூங்காவில் இடம்பெற்ற போது கிளந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு  தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் மக்கள் மத்தியில் பல மதங்களைப் பின்பற்றுகின்றவர்கள் காணப்படுகிறார்கள்.  ஆனால் நாங்கள் அனைவரும் ஒரேயொரு மொழியான தமிழ்மொழியை மாத்திரமே பேசுகின்றோம்.

கடந்த 1956 ஆம் ஆண்டு தொடக்கம் இற்றைவரை நாங்கள் எங்களின் நிலைப்பட்டிலிருந்து மாறவில்லை என்ற கருத்து வெளிவர வேண்டும்.

எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் காணப்பட்டாலும் இந்தத் தேர்தலில் அவற்றையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கரங்களைப் பலப்படுத்தக் கூடிய வகையில் அனைவரும் செயற்பட வேண்டும் என மிகவும் அன்பாகவும், தாழ்மையாகவும் கேட்டுக் கொள்கின்றேன் எனவும் தெரிவித்தார்.

(தமிழின் தோழன்-)





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment