//]]>

Thursday, January 18, 2018

மேர்வின் சில்வாவின் மகனைக் கைது செய்ய உத்தரவு


வழக்கொன்று குறித்து நீதிமன்றத்தில் ஆஜராகாமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக சில்வாவிற்கு கொழும்பு நீதிமன்றம் இன்று(18)பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த-2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கறுவாத்தோட்டம் பகுதியிலுள்ள கழகமொன்றில் பிரித்தானியரொருவரையும், அவரது காதலியையும் தாக்கியதாகத் தெரிவித்து மாலக சில்வா மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று கொழும்பு மேலதிக நீதவான் தர்ஷிகா விமலசிறி முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோது மாலக சில்வா ஆஜராகியிருக்கவில்லை. இதன் காரணமாக அவரைக் கைது செய்து எதிர்வரும் மார்ச் மாதம்-06 ஆம் திகதி மன்றில் ஆஜர்படுத்துமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment