யாழ். நீர்வேலியில் கடந்த வாரம் ஹைஏஸ் வாகனமும் முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதி கோர விபத்துக்குள்ளான சம்பவத்தில் பலியானவர்களின் தொகை மூன்றாக அதிகரித்துள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கிச் சென்று கொண்டிருந்த ஹைஏஸ் வாகனம் முன்னால் சென்ற வாகனமொன்றை விலத்திச் செல்ல முற்பட்ட போது பருத்தித்துறையிலிருந்து யாழ். நகரம் நோக்கி வந்துகொண்டிருந்த முச்சக்கரவண்டியை மோதி தள்ளியுள்ளது
குறித்த சம்பவத்தில் ஆறுவயதுச் சிறுமி உட்பட இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வந்தனர்.
இவ்வாறு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 65 வயதான முதியவரொருவரே சிகிச்சை பலனின்றி இன்று(09) காலை உயிரிழந்துள்ளார்.
('தமிழின் தோழன்')
0 comments:
Post a Comment