சீமைக்கிழுவை (கிளிரிசீடியா) மரத்தை எரிபொருளாகப் பயன்படுத்தி பசுமை மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திட்டமொன்றை இலங்கையுடன் இணைந்து சீனா செயற்படுத்தவுள்ளது. மொனராகலை மாவட்டத்தில் 70 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வகையில் இந்த மின் திட்டம் அமையவுள்ளது.
சீனாவின் Beijing Full Dimension Power Tech Company Ltd , Nanjing Turbine and Electric Machinery Group Company Ltd மற்றும் Electric Machinery Group Company Ltd ஆகிய நிறுவனங்கள் இலங்கையின் IMS Holdings நிறுவனத்துடன் இணைந்து இந்த மின் திட்டத்தை செயற்படுத்தவுள்ளன. இதற்கான உடன்பாடு நேற்று(19) கையெழுத்திடப்பட்டுள்ளது.
சீமைக்கிழுவை எனப்படும் கிளிறிசிடியா மரத்தை எரித்துப் பெறப்படும் எரிபொருளிலிருந்தே இத் திட்டத்தின் மூலம் மின்சாரம் தயாரிக்கப்படவுள்ளது. இதன் மூலம் நூற்றுக்கணக்கான விவசாயிகள் நன்மையடைவர்.
இத் திட்டத்துக்கமைய வருடத்துக்கு 3.2 மில்லியன் டொலருக்கு சீமைக்கிழுவை மரங்கள் கொள்வனவு செய்யப்படவுள்ளன.இந்தத் திட்டத்தின் மூலம் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் மின்சார உற்பத்தி ஆரம்பமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment