//]]>

Friday, January 19, 2018

வடமாகாணத்தின் பல பகுதிகளிலும் நாளை மின்தடை

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக வடமாகாணத்தின் பல பகுதிகளில் நாளை சனிக்கிழமை(20) மின்சாரம் தடைப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இதன்பிரகாரம்,  நாளை(20) காலை-08.30 மணி முதல் மாலை- 05 மணி வரை யாழ். மாவட்டத்தின் தெல்லிப்பழை,மல்லாகம்,  மல்லாகம் நீதிமன்றக் கட்டடத் தொகுதி, ஏழாலை, அளவெட்டி, பன்னாலை, சிறுவிளான், சுன்னாகத்தின் ஒரு பகுதி, சுப்பிரமணியம் வீதி , ஐயனார் கோவிலடி, சுன்னாகம் மக்கள் வங்கி, சுன்னாகம் கார்கில்ஸ் பூட் சிற்றி ஆகிய பகுதிகளிலும்,

காலை-09 மணி முதல் மாலை-05 மணி வரை இலங்கை மின்சார சபையின் சேவைக்குட்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தையும் உள்ளடக்கிய கிளிநொச்சிப் பிரதேசத்தில் வன்னிவிளாங்குளம், ஒட்டறுத்த குளம், டொன் போஸ்கோ, வடகாடு, பாலிநகர், அம்பாள்புரம், கொள்ள விளாங்குளம், ஐம்பது வீட்டுத் திட்டம், பாண்டியன்குளம், நட்டாண்கண்டல், கரும்புள்ளியான், தென்னியங்குளம், உயிலங்குளம், பாரதிநகர், மாங்காக் குடியிருப்பு, ஆலங்குளம், கல்விளான், 66 ஆம் இராணுவ படைமுகாம், பிள்ளையார் அரிசி ஆலை, துணுக்காய் பலநோக்கு கூட்டுறவுச் சங்க அரிசி ஆலை ஆகிய பகுதிகளிலும்,

காலை-08 மணி முதல் மாலை-05.30 மணி வரை வவுனியா மாவட்டத்தின் சாந்தசோலை கிராமம், கொக்கிளிய, அக்போபுர, கோவில்குளம், ஆச்சிபுரம், சமணன் குளம், மகாமயிலங்குளம், மருதநகர், எல்லப்ப மருதங்குளம், பெரிய கூமரசங்குளம், ஆசிக்குளம், சிதம்பரபுரம், அட்டம்பஸ்கட கிராமம், தவசிக்குளம் கிராமம், பண்டாரிக்குளம் கிராமம் ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் கூறியுள்ளார்.

('தமிழின் தோழன்')

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment