//]]>

Saturday, January 20, 2018

வடக்கில் இராணுவம் புதிய அவதாரம்!:அம்பலப்படுத்திய முதலமைச்சர்

கடந்த காலங்களில் தமிழ்மக்களைக் கொடூரமாகக் கொன்று குவித்தும், கற்பழித்தும், சித்திரவதை செய்தும் அரக்கர்களாக மக்கள் மனதில் நிலை கொண்டிருந்த இராணுவத்தினர் தற்போது மக்களுக்கு நல்லது செய்வதன் மூலம் புதிய அவதாரத்தை எடுத்துள்ளனர். இதனால், அவர்கள் நிரந்தரமாக வடமாகாணத்தில் நிலை கொண்டிருப்பதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்தியுள்ளனர். இலங்கை இராணுவத்தினர் தற்போது புதிய யோசனைகளுடன் களமிறங்கியுள்ளனர். அதாவது மக்களுக்கு வீடுகள் மற்றும் கழிவறைகள் அமைப்பதற்கு உதவிகளைச் செய்து கொடுப்பதன் மூலம் மக்களின் நன்மதிப்பைப் பெற்று வருகின்றனர். இதன் மூலம் இராணுவத்தினர் வெகு சாமர்த்தியமாக காய்களை நகர்த்தி வருவதாக வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் கடுமையாகச் சாடியுள்ளார்.

சர்வதேச ஊடகமொன்று வடக்கு முதல்வரை விசேட செவ்வி  கண்ட போது வடக்கில் இராணுவத்தினரின் பிரசன்னம் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளிக்கும் போதே வடமாகாண முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை இராணுவத்தினர் வசமுள்ள சுமார் 60 ஆயிரம் ஏக்கர்கள் காணிகள் இதுவரை விடுவிக்கப்படவில்லை. இவ்வாறு கையகப்படுத்தியிருக்கும் காணிகளிலிருந்து மரங்கள் வெட்டப்படுவதை நான் அறிந்து கொண்டுள்ளேன். எனினும் அது யார் தலைமையில் இடம்பெறுகிறது? என்பது தெரியவில்லை.

வடமாகாணத்தில் முன்னெடுக்கப்படும் பல அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு இலங்கை இராணுவத்தின் ஈடுபடுத்தப்படுவதன் ஊடாக இராணுவத்தின் பிரசன்னத்தை உறுதிப்படுத்த அரசாங்கம் முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment