//]]>

Wednesday, January 10, 2018

வடக்கில் மூன்று மாவட்டங்களில் நாளை மின்தடை


மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக வடமாகாணத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் நாளை வியாழக்கிழமை(11)  மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, நாளை காலை- 08.30 மணி தொடக்கம் மாலை-05 மணி வரை யாழ். ஊர்காவற்துறை, ஊர்காவற்துறை நீதிமன்றக் கட்டடத் தொகுதி, காரைநகர் நாரந்தனை நீர்ப்பாசன சபை  காரைநகர் கடற்படை முகாம்,பொன்னாலை ஆகிய பகுதிகளிலும்,

முற்பகல்- 10 மணி முதல் பிற்பகல்-05 மணி வரை கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை, மானடித்தகுளம், கோணாங்குளம், பெரியபரந்தன், காஞ்சிபுரம், தரணிக்குடியிருப்பு, முட்கொம்பன், அரசபுரம், நல்லூர், தம்பிராய், பூநகரி, வாடியடி, 4 ஆம் கட்டை, பள்ளிக்குடா, கெளதாரிமுனை, பூநகரி 66 ஆவது பிரிவு இராணுவ முகாம், பூநகரி 5 V பற்றாலியன் இராணுவ முகாம் ஆகிய பகுதிகளிலும்,

காலை- 08 மணி முதல் மாலை-05.30 மணி வரை வவுனியா மாவட்டத்தின் தவசிக்குளம் கிராமம், பண்டாரிக்குளம் கிராமம், கணேசபுரம் கிராமம், அட்டம்பஸ்கட கிராமம் ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் கூறியுள்ளார்.

('தமிழின் தோழன்')

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment