//]]>

Wednesday, January 10, 2018

தமிழனிடம் சத்தியப் பிராமணம் மேற்கொண்ட மைத்திரி: சபையை அதிரவைத்த ஆறுதிருமுருகன்(Video)


இலங்கையின் முதல் பிரதம நீதியரசர் என்று சொல்லப்படுகின்ற இன்றைய ஜனாதிபதி பதவியேற்கும் போது ஒரு தமிழனிடம் சத்தியப் பிராமணம் மேற்கொண்டார். அவர் தான் இந்த விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டுள்ள இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசர் க. ஸ்ரீபவன் எனத் தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்கா தேவஸ்தானத்தின் தலைவர் செஞ்சொற் செல்வர்  கலாநிதி- ஆறு.திருமுருகன் புகழாரம் சூட்டினார்.

யாழ். தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தின் முன்னாள் பெருந்தலைவர் சிவத்தமிழ்ச் செல்வி கலாநிதி- தங்கம்மா அப்பாக்குட்டியின் 93 ஆவது பிறந்தநாள் அறக்கொடை விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை(07)  முற்பகல் தேவஸ்தான அன்னபூரணி மண்டபத்தில் இடம்பெற்ற போது முன்னாள் பிரதம நீதியரசர் க. ஸ்ரீபவனைப் பிரதம விருந்தினர் உரையாற்ற அழைக்கும் போதே அவர் அவர் மேற்கண்டவாறு புகழாரம் சூட்டினார்.

இந்த நிகழ்வில் பெருமளவானோர் கலந்து கொண்டிருந்த நிலையில் கலாநிதி- ஆறு.திருமுருகன் இவ்வாறு கூறியதைக் கேட்டு சபையே கைதட்டலால் அதிர்ந்தது.

அங்கு அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

புகழ்பூத்த யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கற்று சட்டத்துறையில் வல்லுனராகி இலங்கை சட்டமா அதிபர் திணைக்களத்தில் உயர்கள் பதவிகள்  வகித்து யாருமே நினைத்துப் பார்க்க முடியாத இலங்கை முழுவதற்குமான பிரதம நீதியரசர் பதவி வகித்தார். இந்தத்  தமிழ் நீதியரசரிடம் தான் இன்றைய ஜனாதிபதி கூடச் சத்தியப் பிரமாணம் மேற்கொண்டார்.

கல்வியால், கடமையால், கண்ணியத்தினால், ஆன்மீகத்தினால், பண்பினால் உயர்ந்த ஒரு நல்ல மனிதர். "நீதி உயர்ந்த மதி கல்வி.  அன்பு நிறையவுடையோர்கள் மேலோர்" என்றான் மகாகவி பாரதியார்.

பெரிய வீடு கட்டியவர்களோ, அதிக பணம் வைத்திருப்பவர்களோ அல்லது அதிகம் படித்தவர்களோ மேலானவர்களில்லை. அன்பு நிறையடையவர்களே மேலோராவர்களாவார்கள். அதற்கு இலக்கணமாக முன்னாள் பிரதம நீதியரசர் க. ஸ்ரீபவன் வாழ்ந்து கொண்டிருக்கின்றார் என்றார் .

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment