//]]>

Friday, January 12, 2018

வீதி ஒழுங்குகளை மீறுவோருக்கு வித்தியாசமான தண்டனை!

வீதி ஒழுங்கு விதிகளை மீறும் சாரதிகளுக்குத் தண்டப்பணப் பத்திரம் வீட்டுக்கு அனுப்பும் முறை எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் பரீட்சித்துப் பார்க்கப்படவுள்ளதாகச் சட்டம் ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் வீதி விபத்துக்கள் அதிகரித்துள்ளமையால் இந் நடவடிக்கையை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாகவும், போக்குவரத்து விதி முறைகளை மீறும் சமயத்தில் எடுக்கப்படும் புகைப்படத்துடன் குறித்த தண்டப்பண பத்திரிகை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் அவர் மேலும் கூறினார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment