யாழ். நுணாவில் சந்தியில் பஸ்ஸிலிருந்து இறங்கி வீட்டுக்கு நடந்து சென்றவரை வழிமறித்த இருவர் கொட்டன்களாலும் கைகளாலும் சரமாரியாகத் தாக்கிவிட்டுத் தப்பியோடியுள்ளனர். இந்தச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை(12) பகல் யாழ். நுணாவில் சந்திக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
தாக்குதலுக்குள்ளான இளைஞர் காயங்களுடன் சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மட்டுவில் மத்தியைச் சேர்ந்த குறித்த இளைஞர் தைப்பொங்கல் பண்டிகையைக் கொண்டாடும் முகமாகக் கொழும்பிலிருந்து தனது சொந்த ஊருக்கு பஸ்ஸில் வருகை தந்துள்ளார். நுணாவில் சந்தியில் இறங்கிய அவர் வீட்டுக்கு நடந்து சென்ற வேளையில் அவரைக் கடந்து மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் கொட்டன்களாலும் , கைகளாலும் சரமாரியாகத் தாக்கிவிட்டுத் தப்பியோடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
0 comments:
Post a Comment