கடந்த-1997 ஆம் ஆண்டு ஒக்டோபர்- 28 ஆம் திகதி யாழ். சிறுப்பிட்டிப் பகுதியின் பெற்றோர் வழங்கிய முறைப்பாட்டில் அடிப்படையில் 16 இராணுவத்தினரை அச்சுவேலிப் பொலிஸார் கைது செய்திருந்தனர். இந்நிலையில் கடந்த-1998 ஆம் ஆண்டு யாழ். நீதவான் நீதிமன்றம் 16 இராணுவத்தினருக்கும் பிணை வழங்கியது.
குறித்த வழக்குச் சட்டமா அதிபரின் ஆலோசனையின் அடிப்படையில் கிடப்பில் போடப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரிக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்று சட்டமா அதிபரால் கடந்த- 2016ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.
இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 16 இராணுவத்தினரில் இருவர் போரில் உயிரிழந்தனர். இந்நிலையில் ஏனைய 14 இராணுவத்தினர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். வழக்கிலிருந்து விடுவிக்கச் சட்டமா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக ஒன்பது இராணுவத்தினர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
ஏனைய ஐந்து இராணுவத்தினருக்கும் யாழ். மேல் நீதிமன்றம் கடந்த வருடம் பிணை வழங்கியது. இந்த வழக்கு யாழ். நீதிமன்ற நீதவான் சி.சதீஸ்தரன் முன்னிலையில் நேற்று வியாழக்கிழமை(11) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் போது சந்தேகநபர்கள் ஐவரும் மன்றில் முன்னிலையாகினர்.
குறித்த வழக்கை முன்னெடுப்பதற்கு மன்னார் மாவட்ட அரச சட்டவாதி சட்டமா அதிபரால் நியமிக்கப்பட்டார். அவர் தற்போது கிழக்கு மாகாணத்துக்கு இடமாற்றலாகிச் சென்றுள்ளார். இதனால், வேறொரு அரச சட்டவாதியை விரைவில் நியமிப்பதாக சட்டமா அதிபர் திணைக்களம் அறிவித்தது.
எனவே, வழக்கு விசாரணையை வேறொரு திகதிக்கு ஒத்திவைக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என அச்சுவேலி பொலிஸார் மன்றில் விண்ணபம் செய்தனர்.
பொலிஸாரின் விண்ணப்பத்தை ஏற்று வழக்கு விசாரணையை எதிர்வரும் ஏப்ரல்- 12ஆம் திகதி வரை ஒத்திவைத்து மன்று உத்தரவு பிறப்பித்தது
0 comments:
Post a Comment