சின்மயா மிஷனின் உலகளாவிய தலைவர் சுவாமி ஸ்வரூபானந்தாஜி முதற் தடவையாக யாழ். மண்ணிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
அவர் கலந்து கொண்ட விசேட ஆன்மீக நிகழ்வு கடந்த செவ்வாய்க்கிழமை(09) பிற்பகல் யாழ். நல்லூர் கோவில் வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ துர்க்கா மணிமண்டபத்தில் இடம்பெற்றது.
வெகு விமரிசையாக நடைபெற்ற இந்த நிகழ்வில் “Life Management Techniques“ எனும் கருப்பொருளில் சுவாமி ஆன்மீக உரையாற்றினார். இதன் தமிழாக்கத்தை யாழ். சின்மயா மிஷன் வதிவிட ஆச்சாரியார் வழங்கினார். இதன் போது 'சின்மய நாதம்' காலாண்டுச் சஞ்சிகைச் சிறப்பு மலரும் வெளியிடப்பட்டது.
இந்நிகழ்வில் துறவியர்கள், குருமார்கள், சமயப் பெரியார்கள் , துறைசார் பெரியார்கள் மற்றும் பெருந்திரளான மக்கள் மழையையும் பொருட்படுத்தாமல் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
0 comments:
Post a Comment