யாழ். குடாநாட்டில் உள்ளுராட்சித் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் வீடு வீடாக விநியோகிக்கும் பணி இன்று சனிக்கிழமை(20) காலை ஆரம்பமாகியுள்ளது.
யாழ். குடாநாட்டில் விநியோகிப்பதற்கென நான்கு இலட்சத்து 68476 வாக்காளர் அட்டைகளை மாவட்டத் தெரிவத்தாட்சி அலுவலகம் யாழ். பிரதம தபாலகத்திடம் பாரப்படுத்தியுள்ள நிலையில் வாக்காளர் அட்டைகள் யாவும் அந்தந்தத் தபாலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையிலேயே யாழ்.குடாநாட்டிலுள்ள அனைத்துத் தபாலகங்களும் இன்றைய தினம் வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
('தமிழின் தோழன்')
0 comments:
Post a Comment