மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக வடமாகாணத்தில் யாழ்.மாவட்டம், வவுனியா ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் இன்று புதன்கிழமை(10) மின்சாரம் தடைப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, இன்று(10) காலை- 08.30 மணி முதல் மாலை-05 மணி வரை யாழ். மாவட்டத்தின் பொன்னாலை கிருஷ்ணன் கோவிலடி, பொன்னாலை வீட்டுத் திட்டம், காரைநகர்ச் சிவன் கோவிலடி, வலந்தலைச் சந்தி, சிவகாமி அம்மன் கோவிலடி, ஆலடி, மருதபுரம், வியாவில், கருங்காலி ஆகிய பகுதிகளிலும்,
காலை- 08 மணி முதல் மாலை-05.30 மணி வரை வவுனியாவின் பண்டாரிக்குளம் கிராமம், தவசிக்குளம் கிராமம், அட்டம்பஸ்கட கிராமம் ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் கூறியுள்ளார். ('தமிழின் தோழன்')
0 comments:
Post a Comment