வடமாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் அனைத்துக் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களைச் சேர்ந்த பெண் வேட்பாளர்கள் ஒன்றிணைந்து இன்று சனிக்கிழமை(20) பிற்பகல் யாழில் புதிய தேர்தல் விஞ்ஞாபனமொன்றை வெளியிட்டுள்ளனர்.
எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் அனைத்துக் கட்சிகளும் தமக்கென ஒவ்வொரு தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு வரும் சூழலில் இன்று பிற்பகல் யாழ்.ஊடக அமையத்தில் விழுது ஆற்றல் மேம்பாட்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே குறித்த தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் வடக்கு மாகாணத்தில் போட்டியிடும் பல பெண் வேட்பாளர்கள் கலந்து கொண்டனர்.
கலந்து கொண்ட பெண் வேட்பாளர்கள் தாம் போட்டியிட முன்வந்தமைக்கான நோக்கங்கள், உள்ளுராட்சி சபையில் பெண்களின் முக்கியத்துவம் மற்றும் தாம் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெல்லும் பட்சத்தில் மேற்கொள்ளவுள்ள செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கருத்துக்களும் தெரிவித்தனர்.
குறித்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள முழுமையான விடயங்களை மேலே இணைக்கப்பட்டுள்ள காணொளியில் காணலாம்.
(எஸ்.ரவி-)
0 comments:
Post a Comment