யாழ். ஏழாலை மகாவித்தியாலய சுற்று மதிலில் எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பாகப் போட்டியிடும் அப்பகுதியைச் சேர்ந்த வேட்பாளரொருவரின் தேர்தல் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
குறிப்பிட்ட வேட்பாளரின் பல தேர்தல் சுவரொட்டிகள் பாடசாலையின் சுற்று மதிலில் ஒட்டப்பட்டுள்ள நிலையில் குறித்த செயற்பாடு தொடர்பில் கல்வியலாளர்களும், சமூக ஆர்வலர்களும் கடும் விசனம் வெளியிட்டுள்ளனர்.
குறித்த பகுதிக்கு அண்மையிலுள்ள பகுதிகளில் ஏனைய கட்சி வேட்பாளர்களின் தேர்தல் சுவரொட்டிகள் தாராளமாகக் காணப்படுகின்ற போதும் மேற்படி பாடசாலையின் சுற்று மதிலில் காணப்படவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
('தமிழின் தோழன்')
0 comments:
Post a Comment