//]]>

Thursday, January 18, 2018

பேருந்து நடத்துனர் மீது சாவகச்சேரியில் தாக்குதல்: சமரசப்படுத்திய பொலிஸார்

வவுனியாவிலிருந்து யாழ். நகரம் நோக்கிச் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்து நடத்துனர் மீது சாவகச்சேரி பஸ் நிலையத்தில் இன்று வியாழக்கிழமை(18) தாக்குதல் நடாத்தப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுத்த பொலிஸார் இருதரப்பினரையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சமரசப்படுத்தி அனுப்பியுள்ளனர். 

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா புதிய பேருந்து நிலையத்திலிருந்து தனது வழமையான சேவையை முன்னெடுத்த இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்தொன்று யாழ். சாவகச்சேரி பேருந்து நிலையத்தில் இன்று முற்பகல்-11 மணியளவில் தரித்து நின்றது. பேருந்தின் நடத்துனர் பயணிகளை இறக்கிக் கொண்டு நின்ற போது யாழ். நகரத்திலிருந்து கொடிகாமம்  நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பஸ்ஸின் நடத்துனர் திடீரென பஸ்ஸிலிருந்து இறங்கி வந்து  இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்தின் நடத்துனர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதுடன் இங்கே பொதுமக்களை இறக்க வேண்டாம் என மிரட்டியுமுள்ளார். 

சம்பவம் தொடர்பில் தாக்குதலுக்குள்ளான பேருந்தின் நடத்துனர் உடனடியாக சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுளளார். இதற்கமைய இரு தரப்பினரையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரித்த பொலிஸார் இருதரப்பினரையும் சமரசப்படுத்தி வழியனுப்பி வைத்தனர். 

('தமிழின் தோழன்')

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment