//]]>

Thursday, January 18, 2018

வெயிலின் கொடுமையால் யாழில் வயோதிபப் பெண் உயிரிழப்பு

வெயிலின் கொடுமை தாங்காது யாழ். அரியாலையைச் சேர்ந்த 70 வயதான வயோதிபப் பெண்ணொருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். 

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, 

யாழ். அரியாலைப் பகுதியைச் சேர்ந்த குறித்த வயோதிபப் பெண் கைதடியில் இயங்கி வரும் சமூக சேவை இல்லமொன்றில் தொண்டுப் பணி செய்து வருகிறார். 

இந்நிலையில் நேற்றைய தினம்(17) மதியவேளை வெளியிலில் நின்று சில மணி நேரம் தனது பணியை மேற்கொண்டுள்ளார். இதன் போது அவர் திடீரென மயங்கி விழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

மயங்கி விழுந்த குறித்த வயோதிபர் ஏனையவர்களின் உதவியுடன் மீட்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலைக்கு உடனடியாக எடுத்துச் சென்று அனுமதித்த போதும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். 

('தமிழின் தோழன்')

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment