எழுத்தாளரும், கிளிநொச்சி வலயக் கல்வி அலுவலகத்தின் உதவிக் கல்விப் பணிப்பாளருமான இயல்வாணன் என்ற புனைபெயரால் பலராலும் நன்கு அறியப்பட்ட சு.ஸ்ரீகுமரன் எழுதிய "பாக்கியம் பாட்டியின் விண்வெளிப் பயணம்", மற்றும் "செல்லையா தாத்தாவும் செல்லக் குழந்தைகளும்" ஆகிய இரு சிறுவர் இலக்கிய நூல்களின் வெளியீட்டு விழா நாளை செவ்வாய்க்கிழமை(23) பிற்பகல்-02 மணிக்கு கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
கிளிநொச்சி வலயத் தமிழ்ப்பாட உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி- பிறேமா மதுரநாயகம் தலைமையில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் வரவேற்புரையை இராமநாதபுரம் அ.த. க.பாடசாலை அதிபர் சு.சுதாஸ்கரனும், வாழ்த்துரையை இளைப்பாறிய வலயக் கல்விப் பணிப்பாளர் க.முருகவேலும், வெளியீட்டுரையைக் கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் தி. ஜோன் குயின்ரஸும் ஆற்றவுள்ளனர்.
குறித்த நூல்களை கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் தி. ஜோன்குயின்ரஸ் வெளியிட்டு வைக்க முதற் பிரதியை தொழிலதிபர் கே. பகீரதன் பெற்றுக் கொள்வார்.
தொடர்ந்து நூல்களின் மதிப்பீட்டுரைகளை காவேரி கலா மன்ற இயக்குநர் வணபிதா ரி.எஸ்.யோசுவா அடிகள், கிளிநொச்சி மகா வித்தியாலய ஆசிரியர் ந.குகபரன் ஆகியோர் நிகழ்த்தவுள்ளதுடன் நூலாசிரியர் ஏற்புரை நிகழ்த்துவார்.
இந்த நூல் வெளியீட்டு விழாவில் ஆர்வலர்கள் அனைவரையும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு நூலாசிரியர் கேட்டுள்ளார்.
0 comments:
Post a Comment