//]]>

Saturday, January 6, 2018

யாழில் தெய்வாதீனமாக உயிர் தப்பிய மூன்று குழந்தைகள்(Photo)

யாழ். குருநகர் ஐந்துமாடி குடியிருப்புக்கு அண்மையிலுள்ள வீடொன்றில் இன்று சனிக்கிழமை(06) காலை திடீர்த் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

வீட்டின் 

அறையொன்றுக்குள் ஏற்பட்ட மின் ஒழுக்கே தீ பரவலுக்கான காரணமெனத் தெரிவிக்கப்படுகிறது.

தீ பரவியதால் வீட்டிலிருந்த மூன்று குழந்தைகள் உட்பட ஆறு பேருக்கும் தெய்வாதீனமாகப் பாதிப்புக்கள் எதுவும் ஏற்படவில்லை. 



தீ பரவிய அறைக்குள்ளிருந்த பெறுமதியான பொருட்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார்.

யாழ். மாநகர தீயணைப்புப் பிரிவினருடன் அப்பகுதியைச் சேரந்தவர்களும் இணைந்து கடுமையான போராட்டத்துக்குப் பின்னர் தீயினைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment