//]]>

Friday, January 5, 2018

வடமாகாணத்தில் நாளை மின்தடை

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக வடமாகாணத்தின் பல பகுதிகளில் நாளை சனிக்கிழமை(06) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, நாளை காலை- 08.30 மணி முதல் மாலை-05.30 மணி வரை இலங்கை மின்சார சபையின் சேவைக்குட்பட்ட யாழ். பிரதேசத்தில் கீரிமலை, கீரிமலைச் சந்நி கடற்படை முகாம், கொல்லங்கலட்டி, வித்தகபுரம், மாவைகலட்டி, கூவில், நல்லிணக்கபுரம், நுணாவில், கைதடி, நாவற்குழி, மறவன்புலோ, தச்சன்தோப்பு, தனங்கிளப்பு, கோகிலாக்கண்டி, கேரதீவு வீதி, அறுகுவெளி, கைதடி வடமாகாண சபை அலுவலகம், பனைவள ஆராய்ச்சி நிலையம், கைதடி யுனைரட் மோட்டார்ஸ் ஆகிய பகுதிகளிலும், 

காலை- 09 மணி முதல் மாலை-06 மணி வரை முல்லைத்தீவு மாவட்டத்தையும் உள்ளடக்கிய கிளிநொச்சிப் பிரதேசத்தின் தேராவில், இருட்டுமடு, மூங்கிலாறு, உடையார்கட்டு, கைவேலி, சுதந்திரபுரம், தேவிபுரம், வல்லிபுனம், 68 ஆவது பிரிவு இராணுவ முகாம், 683 ஆவது இராணுவ முகாம், 18 VIR இராணுவ முகாம் ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்கும்

வவுனியாவின் கணேசபுரம் கிராமத்தில் காலை-08 மணி முதல் மாலை-05 மணி வரையும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் கூறியுள்ளார்.

('தமிழின் தோழன்')

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment