//]]>

Wednesday, January 10, 2018

யாழில் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை நினைவுநாள்(Photo)

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலையின் 44 ஆம் ஆண்டு நினைவு  நாள் இன்று புதன்கிழமை(10) காலை யாழில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், வடமாகாண சபை உறுப்பினர்களான  எம்.கே. சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன், பாலச்சந்திரன் கஜதீபன், பொதுமக்கள், ஆர்வலர்கள்  எனப் பலரும் கலந்துகொண்டனா்.

1974 ஜனவரி-03 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் ஏற்பட்ட கலவரத்தில் ஒன்பது தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இது வரலாற்றில் கறைபடிந்த நாளாகப் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment