//]]>

Saturday, January 6, 2018

'யாழ் 2020 நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட தேசம்' வெளியீடு(Photo)

யாழ்.நகரத்தை எவ்வாறு அபிவிருத்தி செய்வது என்பது தொடர்பாகத்  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் தயாரிக்கப்பட்டுள்ள “யாழ் 2020 - நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட தேசம்” செயற்றிட்டம் தொடர்பான வரைவு இன்று சனிக்கிழமை (06) நண்பகல் சம்பிரதாயபூர்வமாக வெளியீடு செய்து வைக்கப்பட்டுள்ளது.

யாழ். நகரிலுள்ள விருந்தினர் தங்குமிடமொன்றில் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் குறித்த “யாழ் 2020” செயற்றிட்ட வரைபடத்தை  தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினைத் தலைமையாக கொண்டு உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடும் தமிழ் தேசிய பேரவையின் யாழ்.மாநகர சபையின் முதல்வர் வேட்பாளர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் வெளியிட்டு வைத்துள்ளார்.

சில திட்டமிடல் நிபுணர்களுடன் இணைந்து குறித்த செயற்றிட்டத்தினை உருவாக்கியுள்ளதாகவும், தமது கட்சி யாழ். மாநகரசபையினைக் கைப்பற்றினால் 2020 ஆம் ஆண்டுக்குள் யாழ். நகரை நேர்த்தியாக வடிவமைக்க முடியும் எனவும்  தெரிவித்தார்.

இதேவேளை, முன்னர் யாழ். மாநகரைச் சிங்கப்பூராக மாற்றுவோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்தவர்களாலோ, தற்போது
தாங்கள் ஆட்சிக்கு வந்தால் யாழ்ப்பாணத்தை சிங்கப்பூராக மாற்றுவோம் என வாக்குறுதிகளை வழங்குபவர்களாலோ இவ்வாறான முன் திட்டமிடல் வரவொன்றினை வெளியிட முடியாது போயுள்ள சூழலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளரொருவர் முதன் முதலாகத் தான் போட்டியிடும் சபையின் அபிவிருத்தி தொடர்பான திட்டமொன்றைத் தேர்தலுக்கு முன்னதாகவே வெளியிடுவது என்பது புதிய ஆக்கபூர்வமான அரசியல் கலாசாரம் எனப் பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment