//]]>

Wednesday, January 17, 2018

யாழில் பொலிஸ் உத்தியோகத்தர் செய்த நல்ல காரியம்(Photo)


யாழ்.நகரில் மாணவரொருவரால் தவறவிடப்பட்ட பணப்பையைக் கண்டெடுத்த யாழ். பொலிஸ் நிலைய உத்தியோகத்தரொருவர் அதனை மீளவும் மாணவனிடம் ஒப்படைத்துள்ளார். குறித்த சம்பவம் இன்று புதன்கிழமை(17) பிற்பகல் நடைபெற்றுள்ளது.

மேற்படி சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

யாழ்.கொக்குவிலைச் சேர்ந்த குறித்த மாணவன் இன்று பிற்பகல் தேவை நிமிர்த்தம் யாழ். நகருக்குச் சென்றுள்ளார். இதன் போது தனது பணப்பையைத் தவறவிட்டுள்ளார். தனது வீட்டுக்கு அருகில் சென்ற போது தனது பணப்பையைத் தவறவிட்டமையை உணர்ந்த மாணவன் அதிர்ச்சியுற்றுள்ளார். இதனால், குறித்த மாணவன் மனமுடைந்த நிலையில் தான் வந்த வழியெங்கும் பணப்பையைத் தேடியுள்ளார்.

இந்நிலையில் யாழ். இந்து ஆரம்பப் பாடசாலைக்கு முனபாக வீதியிலிருந்து மேற்படி மாணவன் தவறவிட்ட பணப்பையை யாழ். பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவில் பணியாற்றும் உத்தியோகத்தரொருவர் கண்டெடுத்துள்ளார். பணப்பையில் எழுதப்பட்டிருந்த கைத்தொலைபேசி இலக்கத்துக்குத் தொடர்பு கொண்டு மாணவனின் குடும்பத்தை யாழ். பொலிஸ் நிலையத்திற்கு வரவழைத்த குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்  பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் முன்னிலையில் பணப்பையை மீளவும் மாணவனிடம் பத்திரமாகச் சேர்பித்தார்.

குறித்த பணப்பைக்குள் மாணவனின் முக்கிய ஆவணங்கள் மற்றும் ஏழாயிரம் ரூபா பணம் என்பன காணப்பட்டுள்ளன.

பொலிஸ் உத்தியோகத்தரின் இந்தச் செயற்பாடு பலருக்கும் முன்னுதாரணமாகவுள்ள செயற்பாடாகும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment