//]]>

Tuesday, February 27, 2018

ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு அதிகாரம் கிடையாது: கஜேந்திரகுமார் காட்டம்(Video)

ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையால் இலங்கை அரசாங்கத்தின் மூலம் எதனையும் செய்விக்க முடியாது. அதற்கான அதிகாரம் ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையிடம் கிடையாது எனத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் எமது செய்திச் சேவைக்கு விசேடமாகக் கருத்துத் தெரிவிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

30\1 தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றப் போவதில்லை என்பது தெரிந்திருந்தும் அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றச் சர்வதேச சமூகம் ஒத்துழைக்க வேண்டுமெனத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழ்மக்களின் பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொண்டிருக்கின்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்புத் தமிழ்மக்களின் உண்மையான குரலாக ஒலிக்கவில்லை என்ற அடிப்படையிலும், தமிழ்மக்களின் உண்மையான உணர்வை வெளிப்படுத்தும் வகையிலும் நாங்கள் வடக்கு,கிழக்கில் கையெழுத்துப் போராட்டத்தை முன்னெடுக்கின்றோம்.

எங்களுடைய மக்கள் இந்தக் கையெழுத்துப் போராட்டத்தின் முக்கியத்துவத்தை  விளங்கிக் கொண்டு செயற்பட முன்வர வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

(தமிழின் தோழன்-)

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment