யாழ்.குருநகர்ப் பகுதியில் வாய்த்தர்க்கத்தில் ஆரம்பமான குடும்பப் பிரச்சினை முற்றியமையால் கத்திவெட்டில் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் கணவரின் கத்திவெட்டில் காயமடைந்த மனைவி யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுத் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
மேற்படி குடும்பத்தில் சில நாட்க்ளாக குடும்பப் பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை கணவருக்கும் மனைவிக்குமிடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றியதையடுத்து கணவர் மனைவியின் நெற்றியில் கத்தியால் வெட்டியுள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்த 32 வயதான இளம்பெண் யாழ்.போதனா வைத்தியசாலையில் தற்போது சிகிச்சை வருகின்றார். கத்திவெட்டுக்கு காரணமான மேற்படி இளம்பெண்ணின் கணவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
(தமிழின் தோழன்-)
0 comments:
Post a Comment