யாழ். நெல்லியடியில் பாடசாலை முடித்து வீடு திரும்பிச் சென்று கொண்டிருந்த ஆசிரியை ஒருவரின் கைப்பை மோட்டார்ச் சைக்கிளில் வந்த இனம் தெரியாத நபர்களினால் அபகரித்துச் செல்லப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
நேற்றுத் திங்கட்கிழமை(19) பிற்பகல் பாடசாலை முடிவடைந்து துவிச்சக்கர வண்டியில் குறித்த ஆசிரியை வீடு நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது குறித்த ஆசிரியையை பின்தொடர்ந்து மோட்டார்ச் சைக்கிளில் வந்த இனம் தெரியாத இரு நபர்கள் துவிச்சக்கர வண்டியின் முன்கூடைக்குள்ளிருந்த கைப்பையை அபகரித்துச் சென்றுள்ளனர்.
குறித்த கைப்பையில் பெறுமதியான கைத்தொலைபேசி உட்பட முக்கிய ஆவணங்களும் இருந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பில் கைப்பையைப் பறிகொடுத்த ஆசிரியை நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகள் முன்னெடுத்துள்ளனர்.
(தமிழின் தோழன்-)
0 comments:
Post a Comment