யாழ். ஏழாலை மத்தியில் குடும்பப் பெண்ணொருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் வீட்டுக்கிணற்றினுள்ளிருந்து இன்றிரவு(20) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் தனது மகளை கணவனுடன் நுவரெலியாவிற்குச் சுற்றுலா அனுப்பிவிட்டு குறித்த குடும்பப் பெண் மாத்திரம் தனிமையில் வீட்டில் இருந்துள்ள நிலையிலேயே இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது.
திருமதி- அனுஷா பாலகிருஷ்ணன்(வயது-47) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணின் மரணம் தொடர்பில் அவரது உறவினர்கள், அயலவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
ஏழாலைக் கிராமத்தையே உலுக்கியுள்ள குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக செய்திகளை எமது செய்திச் சேவையில் எதிர்பாருங்கள்.
('Jaffna Vision' செய்திகளுக்காக ஏழாலையிலிருந்து- செல்வநாயகம் ரவிசாந்-)
0 comments:
Post a Comment