//]]>

Friday, February 16, 2018

செப்ரெம்பர் மாதம் மாகாண சபைத் தேர்தல்: மகிந்த தேசப்பிரிய தகவல்

மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் எதிர்வரும் மூன்று மாதங்களில் ஆரம்பிக்கப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

குருநாகலையில் நேற்று வியாழக்கிழமை(15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

மாகாணசபைத் தேர்தல்களை எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் நடாத்த முடியும். இதற்கான ஏற்பாடுகளைத்  தேர்தல்கள்  ஆணைக்குழு எதிர்வரும் மே மாதமளவில் ஆரம்பிக்கும் என்றார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment