பழமை வாய்ந்த யாழ். புன்னாலைக்கட்டுவன் வடக்கு அன்னை ஸ்ரீ கட்டுக்குள நாச்சிமார் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா இன்று வியாழக்கிழமை(15) முற்பகல்-11 மணிக்குக் கொடியேற்றத்துடன் ஆரம்பாகியுள்ளது.
கொடியேற்ற உற்சவக் கிரியைகளை தேவஸ்தான ஆதீன குருவும், மஹோற்சவக் குருவுமான பிரம்மஸ்ரீ ந. சபாரத்தினக் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் நிகழ்த்தினர். வசந்தமண்டபப் பூஜையைத் தொடர்ந்து அம்பாள் வீதி வலம் வந்து அருள்பாலித்தார்.
கொடியேற்ற உற்சவத்தை முன்னிட்டு விசேட மேளக் கச்சேரி ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் கொடியேற்ற உற்சவத்தைப் பல எண்ணிக்கையான அடியவர்கள் கண்டுகளித்தனர்.
தொடர்ச்சியாக 15 தினங்கள் பகல் இரவு உற்சவங்களாக இவ்வாலய மஹோற்சவம் சிறப்புற இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
(எஸ்.ரவி-)
0 comments:
Post a Comment