//]]>

Friday, February 16, 2018

ரணிலுக்கு மகிந்த ராஜபக் ஷ கொடுத்த வாய்ப்பு!

பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்க விலக வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஷ பிரதமரைக் கேட்டுக் கொண்டுள்ளதாக  அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று(15) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமைச்சர் ராஜித சேனாரத்ன குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.

பிரதமருடன் தொலைபேசியில் உரையாடிய போதே மகிந்த ராஜபக் ஷ இவ்வாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

உள்ளூராட்சித் தேர்தலில் ஐக்கியதேசியக் கட்சி குறிப்பிடத்தக்களவு வாக்குகளைப் பெற்றுள்ளமையால் பிரதமர் பதவியில் மாற்றம் செய்யத் தேவையில்லை என ரணில் விக்கிரமசிங்கவிடம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஷ கூறியதாக ராஜித சேனாரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment