பட்டம் ஏற்றிக்கொண்டிருந்த 12 வயதுச் சிறுவனொருவன் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.இந்தப் பரிதாபகரமான சம்பவம் யாழ். தென்மராட்சி கல்வயல் பகுதியில் இன்று திங்கட்கிழமை(19) பிற்பகல்-05:30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக எமது யாழ். மாவட்ட விசேட செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
பட்டம் ஏற்றிக்கொண்டு பின்பக்கமாக ஓடிய போதே இந்த விபரீதம் இடம்பெற்றுள்ளதாகச் சாவகச்சேரிப் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாகவும், இவ்வாறு உயிரிழந்த சிறுவன் அதே பகுதியைச் சேர்ந்த ஜெயகுமாரன் தீசன் எனவும் எமது விசேட செய்தியாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
(தமிழின் தோழன்-)
0 comments:
Post a Comment