எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கான தேர்தல் பிரசாரப் பணிகள் யாவும் நிறைவுக்கு வந்துள்ள நிலையில் தேர்தல் விதிமுறைகளையும் மீறி யாழ். வலிகாமத்தின் ஏழாலை, மயிலங்காடு ஆகிய பகுதிகளில் தேர்தல் பிரசாரம் இடம்பெறுவதாக எமது செய்திச் சேவை நேற்றைய தினம்(08) செய்தி வெளியிட்டிருந்தது.
குறித்த செய்தியின் எதிரொலியாக ஏழாலை மற்றும் மயிலங்காடு ஆகிய பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் இரு வேட்பாளர்கள் தங்கள் வீடுகளின் முன்பாகக் காட்சிப்படுத்தியிருந்த பதாதைகள் இன்றைய தினம் அகற்றப்பட்ட நிலையில் காணப்படுவதாக எமது யாழ். மாவட்ட விசேட செய்தியாளர் தெரிவித்தார்.
(தமிழின் தோழன்-)
0 comments:
Post a Comment