உலக கின்னஸ் சாதனையாளரும், இளவாலை ஹென்றியரசர் கல்லூரியின் பழைய மாணவருமான அருளானந்தம் சுரேஷ் ஜோக்கிம் இன்று ஞாயிற்றுக்கிழமை(25) யாழ். வருகை தந்துள்ளார்.
இவர் உலகநாடுகளில் சமாதானம், வறிய மாணவர்களின் கல்வி மேம்பாடு ஆகிய விடயங்களை முன்னிறுத்தி வறுமையை ஒழிப்போம், போர் வேண்டாம், நோயை எதிர்ப்போம் எனும் மையக் கருத்தின் அடிப்படையில் உலக மரதன் ஓட்ட நிகழ்வை நிகழ்த்தி வருகிறார்.
இவர் இலங்கைக்கான இறுதி நாள் ஓட்டத்தினை நிறைவுசெய்யும் பொருட்டு சாவகச்சேரி பேருந்து நிலையத்திலிருந்து இன்று பிற்பகல்-01:45 மணியளவில் மரதன் ஓட்ட நிகழ்வை ஆரம்பித்தார். இதன் போது பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டு கொடியசைத்து யாழ். மரதன் ஓட்ட நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர்.
அவர் அங்கிருந்து தாம் கல்வி பயின்ற இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியில் தனது மரதன் ஓட்ட நிகழ்வை நிறைவு செய்யவுள்ளார். இவர் வவுனியா மாவட்டத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவராவார்.
270 நாட்களில் 72 நாடுகளில் 123 நகரத்தில் 4000 கிலோ மீற்றர் தூரம் ஓடி கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சியில் சுரேஷ் ஜோக்கிம் ஈடுபட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
(தமிழின் தோழன்-)
0 comments:
Post a Comment