நாட்டில் ஏற்பட்டிருக்கும் அரசியல் ஸ்திரமற்ற தன்மை தொடர்பாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சி கொண்டுவந்த சபை ஒத்திவைப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறான கருத்துக்களை முன்வைத்துள்ளார்.
அரசியலமைப்புத் தீர்வைக் கொண்டுவந்து உள்ளூராட்சித் தேர்தலின் ஊடாக தமிழீழம் மலரப் போவதாகவும், தமிழீழத்தை ஏற்படுத்துவதற்கான சர்வஜன வாக்கெடுப்பாக உள்ளூராட்சி தேர்தல் நடத்தப்படுவதாகவும் மஹிந்த ராஜபக் ஷ பிரசாரங்களை முன்னெடுத்திருந்தார். இவ்வாறான பிரசாரங்கள் அப்பாவி மக்களை ஏமாற்றும் வகையில் முன்னெடுக்கப்பட்ட தவறான பிரசாரங்களாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
0 comments:
Post a Comment