மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக வடமாகாணத்தின் சில பகுதிகளில் இன்று புதன்கிழமை(07) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்தார்.
இதன்படி, இன்று புதன்கிழமை காலை- 08.30 மணி முதல் மாலை-05.30 மணி வரை யாழ். மாவட்டத்தின் காரைநகர்ச் சிவன் கோவிலடி, பொன்னாலை கிருஷ்ணன் கோவிலடி, பொன்னாலை வீட்டுத் திட்டம், பொன்னாலை கூல்மென் ஐஸ் தொழிற்சாலை, வலந்தலைச் சந்தி, சிவகாமி அம்மன் கோவிலடி, ஆலடி, மருதபுரம், வியாவில், கருங்காலி ஆகிய பகுதிகளிலும்,
காலை- 09 மணி முதல் மாலை-05 மணி வரை கிளிநொச்சி மாவட்டத்தின் கோணாங்குளம், கண்டாவளை, மானடித்த குளம், ஆகிய பகுதிகளிலும்,
காலை- 08 மணி முதல் மாலை-05.30 மணி வரை அட்டம்பஸ்கட கிராமம், தவசிக்குளம் கிராமம், பண்டாரிக்குளம் ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் கூறியுள்ளார்.
(எஸ்.ரவி-)
0 comments:
Post a Comment