அம்பாறை அட்டம்பள்ளம் பிரதேசத்தில் இந்துமயான அபகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்துக் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 21 தமிழர்களுக்கும் இன்றைய தினம்(05) பிணை வழங்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டத்தின் அட்டம்பள்ளம் பிரதேசத்தில் பல்லாண்டுகளாக வாழ்ந்து வரும் தமிழ்மக்களுக்குச் சொந்தமான இந்துமயானக் காணியை அண்மையில் வேற்று இனத்தவர்கள் ஆக்கிரமிக்க முற்பட்ட நிலையில் தமிழ்மக்களுக்கும், ஆக்கிரமிப்பாளர்களுக்குமிடையில் முறுகல் நிலை உண்டானது.
குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகள் மேற்கொண்டதுடன் சம்பவம் தொடர்பில் இரண்டு பெண்கள் உட்பட 21 பேரைக் கைது செய்தனர்.
கைதுசெய்யப்பட்ட 21 தமிழர்களும் நீதிமன்ற உத்தரவின் பேரில் மட்டக்களப்புச் சிறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment