யாழ்.குடாநாட்டில் மரக்கறி வகைகளில் ஒன்றான தக்காளிப் பழத்தின் விலையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது.
யாழ். குடாநாட்டின் முக்கிய சந்தைகளில் ஒன்றான திருநெல்வேலிப் பொதுச் சந்தையில் இன்றைய தினம்(05) ஒரு கிலோ தக்காளிப் பழம் 15 ரூபாவாக விற்பனையாகியது.
குடாநாட்டின் பலவிடங்களிலிருந்தும் தக்காளிப் பழம் அதிகளவில் விவசாயிகளால் எடுத்து வரப்படுகின்ற நிலையிலேயே தக்காளிப் பழத்தின் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, ஏனைய மரக்கறி வகைகளின் விலைகளும் வீழ்ச்சியடைந்த நிலையிலுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
(எஸ்.ரவி-)
0 comments:
Post a Comment