//]]>

Friday, March 2, 2018

தியத்தலாவ பஸ் குண்டுவெடிப்பு:இராணுவ வீரருக்கு ஏற்பட்டுள்ள நிலை!

தியத்தலாவ பகுதியில் இடம்பெற்ற பஸ் குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பில் இராணுவ வீரரொருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் முடிவின் அடிப்படையில் குறித்த பஸ்ஸில் பயணித்த இராணுவத்தின் ஆறாவது இலங்கை மின் மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் அதிகாரம் பெற்ற அதிகாரி II தரமுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

குறித்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த இருவரில் ஒருவரான குறித்த அதிகாரி தியத்தலாவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கைது செய்யப்பட்டுப் பண்டாரவளை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவரை எதிர்வரும் மார்ச்-16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment