நாடு முழுவதும் அவசரகாலச் சட்டத்தைப் பத்து நாட்களுக்கு அமுல்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் எஸ்.பி .திஸாநாயக்கா தெரிவித்துள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை (06) மதியம் முதல் இந்த அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இன வன்முறைகளைத் தடுக்கும் நோக்குடனும், சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் நோக்குடனும் அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்றைய தினம் சிங்கள, முஸ்லீம் மக்களிடையே இடம்பெற்ற இன மோதலையடுத்தே அரசாங்கம் குறித்த முடிவை எடுத்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment