சிரிய நாட்டில் இடம்பெற்று வரும் இனப்படுகொலைக்கெதிரான கண்டன ஆர்ப்பாட்டம் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று வியாழக்கிழமை(01) முற்பகல்-10 மணி முதல் இடம்பெற்றது.
இனப்படுகொலைக்கெதிரான தமிழ்மக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்,முஸ்லீம் இளைஞர்கள்,சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு உள்ளிட்ட
பல்வேறு பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் "2009 முள்ளிவாய்க்கால்...2018 சிரியா...." , இனப்படுகொலையை நிறுத்து உள்ளிட்ட பல்வேறு சுலோகங்களை ஏந்தியும், கோஷங்களை எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
(தமிழின் தோழன்-)
0 comments:
Post a Comment