அம்பாறை மாவட்டத்தில் அண்மையில் இடம்பெற்ற சம்பவத்துடன் தொடர்புடைய சகலரையும் கைது செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள இணை அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன குடும்பக் கட்டுப்பாட்டு மாத்திரை வழங்கியதாலே இந்த மோதல் ஏற்பட்டதாக தெரிவிக்கும் குற்றச்சாட்டில் எந்த உண்மையும் கிடையாது எனவும் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம்(28) கொழும்பில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அம்பாறைத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஊடகவியலாளர்களால் வினாவப்பட்ட போது அதற்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அம்பாறை நிலைமை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.இதன் பின்னணியிலிருப்போர் குறித்து ஆராயப்படுகிறது.
இந்த பிரச்சினையை சிலர் வேண்டுமென்றே தூண்டி விட்டனரா? என்பது குறித்தும் ஆராயப்படுவதாகத் தெரிவித்த அவர் சமூக வலைத்தளங்களினூடாகச் சிலர் இனவாதத்தை தூண்டி விட முயல்வதாகவும் இணை அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன மேலும் குற்றம் சாட்டியுள்ளார்.
0 comments:
Post a Comment