பசி துன்பத்தைக் பொறுத்துக் கொள்ளுதலும், பிறருக்கு மனதினாலும் தீங்கு செய்யாமல் இருப்பதும்தான் தவத்தின் வலிமையாகும்.
பணம் எட்டாத உயரமும், பாயாத பாதாளமும் இல்லைதான். ஆனால், சத்தியம் பணத்தின் நிழலில் தங்கக்கூட தயங்குகிறது.
இடி விழுந்தவனுக்கு சிகிச்சை பலிக்காதது போல, நன்றி மறந்தவனுக்கு என்றும் நன்மை கிட்டாது. மக்களை மக்களென நினைத்து பணியாற்றும் செய்கை வந்தாலொழிய நாடு நன்மை பெறாது.
- பூண்டி மகான்
0 comments:
Post a Comment