உலகின் வேகமான சூப்பர் கம்யூட்டர்களை உருவாக்க ஜப்பான் தீவிர முயற்சி எடுத்து வருகிறது. இதற்காக 173 மில்லியன் டாலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. ஜப்பானில் உள்ள உற்பத்தியாளர்கள் ஓட்டுனரில்லா கார், ரோபாட்டிக்ஸ் போன்ற புதிய கண்டுபிடிப்புகளை மேம்படுத்திக் கொள்ள அவர்களுக்கு சூப்பர் கம்ப்யூட்டர் உதவும் என ஜப்பான் வல்லுனர்கள் இந்த முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சூப்பர் கம்ப்யூட்டர்கள் வினாடிக்கு 130 குவாட்ரில்லியன் கணக்கீடுகளை (130 quadrillion calculations per second) போடும் திறனுடையதாக இருக்கும்.
ஜப்பான், தென் கொரியா, சீனா ஆகிய நாடுகளுக்கு இடையே தொழில்நுட்பத்துறையில் கடும் போட்டி நிலவி வருகிறது. தொழில்நுட்ப உலகில் ஜப்பான் தனது இடத்தை நிலை நிறுத்தி கொள்ளவே இந்த முயற்சி மேற்கொண்டு வருகிறதாம்!
0 comments:
Post a Comment