இலங்கையின் திருகோணமலையில் இருந்து 720 கிலோ மீட்டர் தொலைவில் வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி மையம் கொண்டுள்ளது. இதனால் இலங்கையில் அதிகளவு மழையுடன் பலமான சூறாவளிக் காற்றும் வீசும் அபாயம் காணப்படுகிறது.
இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை அடுத்த 24 மணிநேரத்தில் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும். இவ்வாறு மாறி வடமேற்கு திசையை நோக்கு நகரும். இது அடுத்த 24 மணிநேரத்தில் புயலாக மாறி 2 ஆம் திகதி கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதனால் இன்று இரவு முதல் லேசானது முதல் மிதமான மழையும், நாளை மற்றும் நாளை மறுநாள் கடலோர பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இது தவிர கடலோர பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். சில சமயத்தில் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசலாம்.
இதனால் இன்று இரவு முதல் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
சென்னையை நோக்கி வீறுகொண்டு வரும் பெரும் புயல்
சென்னைக்கு தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இது சென்னையில் இருந்து 1,070 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது.
இது அடுத்த 24 மணிநேரத்தில் புயலாக மாறி சென்னையை நோக்கி செல்லும். இந்த புயல் வரும் 2ம் தேதி காலை சென்னை-வேதாரண்யம் இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை, கடலூர், சிதம்பரம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் மிக கனமழை பெய்யும் வாய்ப்பு அதிகம் உள்ளது. மேலும் திருச்சி, கோவை, சேலம், தர்மபுரி உள்ளிட்ட உள்மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment